கும்பகோணத்திற்கு தென்மேற்கே 6 கி. மீ. தொலைவிலும், தாராசுரத்திலிருந்து 3 கி. மீ. தொலைவிலும் உள்ளது. பட்டீஸ்வரம் சிவன் கோயிலுக்கு எதிர்ச்சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். இறைவனை அம்பிகை வழிபட்டு தழுவி முத்தமிட்ட தலம். அதனால் சத்திமுத்தம் என்று அழைக்கப்பட்டது. இத்திருக்கோலத்தை இன்றும் இத்தலத்தில் தரிசிக்கலாம். தமக்கு திருவடி தீட்சை அளிக்க வேண்டும் என்று அப்பர் பெருமான் வேண்ட, அவரை திருநல்லூர் தலத்திற்கு வருமாறு இறைவன் அருளிய தலம். அத்தலத்தில் அப்பருக்கு திருவடி தீட்சை கிடைத்தது. |